1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (10:16 IST)

பேரறிவாளனை சந்திப்பவர்களுக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனை சந்திப்பவர்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.


 

 
இந்த வழக்கில் பேரறிவாளன் 26 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். அவரது தந்தையின்  உடல் நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த ஆகஸ்டு 24ம் தேதி அவருக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது. அதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு அவர் சென்றார். 
 
அப்போது அவரை  அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் சந்தித்து பேசினர். ஒரு மாதத்தில் மட்டும் அவரை 1657 பேர் சந்தித்து உரையாடியதாகக் கூறப்படுகிறது.
 
அந்நிலையில், தனது மகனின் பரோலை மீண்டும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அற்புதம் அம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை அரசு ஏற்று பரோலை நீட்டித்துள்ளது. 
 
இந்நிலையில், பேரறிவாளனை ரத்த சொந்தங்கள் தவிர வேறு யாரும் சந்திப்பதோ, அவரின் வீட்டில் தங்குவதோ கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.