ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (16:23 IST)

சென்னை தான் லாஸ்ட்.... தேர்தல் நிலவரம் 3 மணி வரை.... வெளியான புள்ளிவிவரம்!!!

தமிழகத்தில் மத்திய சென்னையில் தான் மிகக்குறைவான வாக்கு பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில்  13.48 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாகயிருந்தது. 11 மணியளவில் 30.6 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 39.49 சதவீதமும் வாக்கு பதிவாகியிருந்தது.
 
இதைத்தொடர்ந்து தற்போது 3 மணி நிலவரப்படி 50.02 சதவீதமும்  18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை 3 மணி நிலவரப்படி 55.7 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்திலேயே கரூரில் அதிகபட்சமாக 56.85 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 45.65 சதவீதமும் வாக்கு பதிவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.