செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (19:17 IST)

ஆசைமணியை ஆசைத்தம்பியாக மாற்றிய முதல்வர் பழனிச்சாமி!

தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர் பெயரையும் சின்னத்தையும் மாறி மாறி கூறும் கூத்து இந்த தேர்தலில்தான் அதிகம் நடந்து வருகிறது. இன்று காலை கூட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாம்பழம் சின்னத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னம் என்று கூறியது நெட்டிசன்களுக்கு சரியான தீனியாக இருந்தது
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் ஆசைமணிக்கு வாக்கு சேகரித்து வந்தபோது ஒரு இடத்தில் ஆசைமணி என்று கூறுவதற்கு பதிலாக ஆசைத்தம்பி என்று கூறிவிட்டார். இதனால் வேட்பாளர் உள்ளிட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்
 
மேலும் முதல்வர் தன்னுடைய பிரச்சாரத்தில் அம்மாவின் ஆட்சியில் ஆறுகள் இணைக்கப்படும் என்றும், வேளாண் பெருமக்கள் இனிமேல் தண்ணீர் இல்லை என்ற நிலையே ஏற்படாது என்றும் வாக்குறுதி அளித்தார். ஆசைத்தம்பி என்பவர் கடந்த 60கள் மற்றும் 70களில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதே தொகுதியில் நேற்று முன் தினம், வேட்பாளர் ஆசைமணிக்காக துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்து தீவிர வாக்குவேட்டை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது