செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (11:18 IST)

எம்.எல்.ஏக்கள் மனநல மருத்துவரை சந்திக்கவும்! – வலுக்கும் கிரண்பேடி மோதல்!

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியினருக்கும், துணை நிலை ஆளுனர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

புதுச்சேரி சட்டசபையில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடி குறித்து எம்.எல்.ஏக்கள் அளித்த புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பஞ்சாப் வீட்டிற்கு கிரண்பேடி வாடகை தராதது, அரசு ஊழியர்கள் சம்பள விவகார பேச்சு, டாக்டர்கள் குறித்த சர்ச்சை பேச்சு என கிரண்பேடி மீது எம்.எல்.ஏக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில் அவற்றை கிரண்பேடி மறுத்துள்ளார்.

மேலும் எம்.எல்.ஏக்கள் தன்மீது மக்களுக்கு தவறான அபிப்ராயம் ஏற்பட வேண்டுமென திட்டமிட்டு பேசுவதாகவும் அவர்கள் நல்ல மனநல மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி துணை நிலை ஆளுனர் கிரண்பேடியுடன் எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இந்த கொரோனா காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.