1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (10:17 IST)

என்னதான் சட்டைய கிழிச்சாலும்... நாங்க சட்ட பண்ணாதான் சட்டம்: ஸ்டாலினை சீண்டிய தமிழிசை!

முத்தலாக் மசோதா மசோத நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழிசை திமுக தலைவர் ஸ்டாலினை சீண்டும் வகையில் டிவிட் போட்டுள்ளார். 
 
முத்தலாக் மசோதா கடந்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.  
 
முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைக் காட்டின. 11 எம்பிக்களைக் கொண்டுள்ள அதிமுக எதிர்த்து கருத்துத் தெரிவித்தது. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. 
இருப்பினும் 99-84 என்ற வாக்கு கணக்கில் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் சில டிவிட் போட்டுள்ளார். அதில் திமுக தலைவர் ஸ்டாலினை சீண்டியுள்ளார். தமிழிசை பதிவிட்டதாவது, 
 
தமிழையும் தமிழரையும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் தாய்மொழிக் கல்வியையும் மத்திய அரசு முன்னிறுத்த மோடி அவர்களின் அரசு விரும்புவதால்தான் அத்தகைய தவறுகள் உடனே சரிசெய்யப்படுகிறது. திமுக உறுப்பினர்களுக்கு பயந்து அல்ல. தமிழ்மக்களின் தேவையே எம் சேவை என்பதே மோடி அவர்களின் தாரக மந்திரம்.
கோரிக்கை மனு கொடுக்கலாம், வெளிநடப்பு செய்யலாம், ஏன் சட்டையை கிழித்துக் கொண்டாலும் மத்திய அரசு சட்டை செய்தல்தான் அவை சட்டமாகும் என்பதே உண்மை. இந்தியை திணிக்கவில்லை, காங்.பசிதம்பரம் தலைமையிலான இந்தி மொழிபயன்பாடு மைய அரசில் அதிகரிக்கும் செயல் விளைவுகள் அவை!
 
இந்தி திணிப்பு தமிழுக்கு ஆபத்து என திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதால்தான் மத்திய அரசு பயந்து போய் பணிகிறது எனும் ஸ்டாலின் அவர்களே! முத்தலாக் எதிராக குரல் கொடுத்தார்களே? முத்தலாக் நின்றதா? இல்லையே மத்தியரசு கோரிக்கைக்கு உடன்பட்டால்தான் எதுவும் நடக்கும் என தெரிவித்துள்ளார்.