புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (15:34 IST)

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பிரியங்கா காந்தி ? அடுத்த வாரம் முக்கிய ஆலோசனை

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில்  பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில் இரண்டாம் முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில்  காங்கிரஸ் கட்சி பரிதாபமாகத் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இந்த தோல்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் பொறுப்பேற்காததால், கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜிமானா செய்தார். இதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுலே தலைவரகாகத் தொடரவேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
 
 இந்நிலையில் அடுத்த தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று கூறி,மே 25 ஆம் தேதி ராகுல்  காந்தி ராஜினாமா கடிதம் அளித்துவிட்ட நிலையில் அக்கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதில் 2 மாதங்களாகக் குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையில் ராகுல் காந்தி வெளிநாடு பயணமாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
 
இதனையடுத்து ,அடுத்த வாரம் காங்கிரஸ் செயற்குழு கூடி, அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக விவாதிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் கே. சி . வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக  மாநில  காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. இப்படியிருக்க பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவர் ஆக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.