புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (21:28 IST)

மீண்டும் திருவாரூர் தேர்தல் அறிவிப்பு வருமா?

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி காலமானதால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி அந்த தொகுதியில் ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருக்கும் திருவாரூர் தொகுதிக்கு இப்போதைக்கு தேர்தல் தேவையில்லை என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து கூறியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்துசெய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும் தேர்தலை ரத்து செய்யும் அறிவிப்புக்கு முன் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து ஒப்புதல் பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணையின்போது நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தால் தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.