1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (16:21 IST)

இடைத் தேர்தல் எப்போது –முதல்வர் எடப்பாடிப் பழனிசாமி சூசக பதில் !

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூசகமாக பதிலளித்துள்ளார்.

நேற்று புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு விட்டு விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு அதிமுக வினர் ஏற்பாடு செய்திருந்த விழாக்களில் கலந்து கொண்டு பேசினார்.

நேற்று மாலையில் சாத்தூரில் நடந்த விழாவில் கலந்து கொண்டு ‘முதலில் எங்கள் ஆட்சி 10 நாள் நீடிக்காது என்றனர். பின்னர் ஆறு மாதத்தில் கலைந்து விடும் என்றனர். உங்கள் (மக்கள்) ஆதரவால் இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அதோடு இங்கே காலியாக உள்ள  ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய இடைத்தேர்தல்களும் வர இருக்கின்றன. இரண்டு தேர்தல்களிலும் நீங்கள் அதிமுக வுக்கே வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்யவேண்டும்; எனப் பேசினார்.

மத்திய பாஜக வுக்கு நெருக்கமாக இருக்கும் முதல்வரே இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலொடு சேர்ந்து வரும் எனக் கூறியிருப்பதால் இடைத்தேர்தல் நடக்கும் தேர்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.