மோடி அலை ஒருநாளும் ஓயாது.. ஓயவைக்கவும் முடியாது – தமிழிசை ஆவேசப் பேட்டி
ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றன. பாஜக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக அங்கேயும் தனது செல்வாக்கை இழந்துள்ளது. இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீசியதாக கூறப்பட்ட மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் தேர்தல் பின்னடைவு குறித்துப் பதிலளித்துள்ளார். அதில் ‘சட்டீஸ்கரைத் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக மிக நெருக்கமானப் போட்டியை காங்கிரஸுக்கு கொடுத்துள்ளது. சட்டீஸ்கரில் மட்டும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. அதனால் கடுமையாக உழைத்த பாஜகவினர் தோல்வியடைந்துவிட்டதாக கூற முடியாது.
இந்த தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் நாடாளு மன்றத் தேர்தலைப் பாதிக்காது. ராஜஸ்தான் மக்களேக் கூட சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் நாட்டின் பிரதமராக மோடிதான் வர வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதனால மோடி அலை ஓய்ந்து விட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மோடி அலை ஓயவில்லை. அதை ஒருக்காலமும் ஓயவைக்கவும் முடியாது.
எந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது, வெற்றி பெற்றால் துள்ளிக்குதிக்க மாட்டோம், தோல்வியடைந்தால் துவள மாட்டோம் ’ எனத் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.