புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (15:50 IST)

இனி வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிப்பு..

தமிழகத்தில் இனி வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டெங்குவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டுமே 500 க்கு பேருக்கு மேல் டெங்குக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

டெங்குவை கட்டுபடுத்த தமிழக சுகாதாரத்துறையால் பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இனி வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமைகளில் சுகாதார அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் ஆய்வு நடத்தி கொசு உற்பத்திக்கு இடமளித்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.