வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:59 IST)

இது பாஜகவின் பழிவாங்கும் அரசியல்- மம்தா பானர்ஜி

அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து அவரை பதவியில் இருந்து விளைவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிர்வாக பரிந்துரை செய்தது 

இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும்  பரிந்துரை அறிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மஹுவா மொய்த்ரா  தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியதை அடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

இந்த விவகாரம் பற்றி மே.வ., முதல்வர் மம்தா பானர்ஜி,

‘’இது பாஜகவின் பழிவாங்கும் அரசியல். இது ஒ அ நீதியாகும். பாஜகவினர் ஜன நாயகத்தை கொல்கின்றனர். மஹூவா தன் விளக்கத்தை தெரிவிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த போரில் மஹூவா வெற்றி பெறுவார். மக்கள் நீதி வழங்குவர். அடுத்த தேர்தலில் பாஜகவினர் தோற்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஹூவா கூறியதாவது: ‘எனக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சாட்சியங்கள் இரண்டு தனிப்பட்டவர்களின் எழுத்துப்பூர்வ சாட்சியங்களை அடிப்படையாக கொண்டவை. அவை ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன’ என்று கூறியுள்ளார்.