செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (14:12 IST)

ரூ. 5 லட்சம் வரை UPI பரிவர்த்தனை - ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

upi payment
யுபிஐ மூலம் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில்  யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவுமுறை இந்திய தேசிய பேமண்ட் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.
 
யுபிஐ மூலம் எந்த வங்கிக் கணக்கிற்கும் மொபைல் மூல்ம நாம் பணம் அனுப்ப முடியும். இதற்கு வங்கிக் கணக்கு போன்ற விவரங்கள் தேவையில்லை. இதனால் மக்கள் இப்போ பே, பேடிஎம், பாரத் பே, கூகுள் பே போன்ற ஆப்கள் மூலம் எளிதாக அனுப்பி வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  மருத்துவமனை, கல்வி நிலையங்களில் இனிமேல் யுபிஐ மூலம் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.