வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (10:19 IST)

கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற காவலருக்கு கத்திக்குத்து

பெண்ணிடம் நகை பறிப்பு செய்த வாலிபர்களை பிடிக்க சென்ற போக்குவரத்து தலைமை காவல் அதிகாரியை கொள்ளையர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த நாகமணி, தன் உறவினரைப் பார்க்க சென்னை புரசைவாக்கத்திற்கு வந்துள்ளார். அப்போது இரு சக்க வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், நாகமணியிடம் இருந்து 3 சவரன் நகையையும், செல்போனையும் பறித்து சென்றனர்.
 
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் விஜயகுமார், அந்த இரு கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த கொள்ளையன், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயகுமாரை சரமாரியாக தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த போதிலும் விஜயகுமார் ஒரு கொள்ளையனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காயமடைந்த காவலர் விஜயகுமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்ப்பட்டு வருகிறது.
 
இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் புதுப்பேட்டையை சேர்ந்த அருண்குமார், முகமது ரஷீத் என்பது தெரியவந்தது. அருண்குமார் சிக்கிய நிலையில் தலைமறைவாக இருந்த முகமது ரஷீதையும் போலீஸார் கைது செய்தனர். கொள்ளையர்கள் போலீஸாரையே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.