1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (17:37 IST)

’பிகில்’ படத்துக்கு இந்த நிலைமையா ? அவ்ளோதானா ? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி !

விஜய் - நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் தொடர்ந்து சில நாட்களாக வசூல்  குவித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இன்று சென்னை தேவி தியேட்டரில் போதுமான மக்கள் கூட்டம் இல்லாததால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
விஜய் - நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியானனது பிகில் படம், இப்படம் அனைத்து தரப்பு மக்களைக் கவருவதாகக் கூறப்பட்டாலும் கூட அட்லி சிலருடைய படங்களில் இருந்து சில காட்சிகளை எடுத்து, விஜய் கதாப்பாத்திரத்தில் கையாண்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையிலும் கூட விஜய் ரசிகர்கள் இப்படத்தை வெறித்தனமாகக் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில், பிகில் படம் வெளியாகி 7 நாட்கள்  ஆகியுள்ளதால் தியேட்டர்களில் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் செனை தேவி பாரடைஸில் போதுமக்கள் கூட்டம் இல்லாததால் மதியக் காட்சிக்கு ஆன்லைனில் புக் செய்தவர்களை தேவி திரையரங்குக்கு நிர்வாகம் மாற்றியது.  இதனால் பிகில் படத்துக்கு ரசிகர்கள் குறைந்ததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.