வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (18:25 IST)

அம்மா வாட்டர் இயந்திரத்தின் காலம் முடிந்து விட்டது : எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இனி அம்மா வாட்டர் பேருந்து நிறுத்தம் மற்றும் பேருந்து நிலையங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் மருத்துவமனைகளிலும் கிடைக்கும் என்றும், அம்மா வாட்டர் இயந்திரத்தின் காலம் முடிந்து விட்டதால் உற்பத்தி குறைந்து வருகின்றது – நிறைய பழுதுகளும் ஏற்பட்டு வருவதால் அதை மாற்றி விட்டு புதிய இயந்திரங்கள் அமைக்கும் பணி செயல்படுத்தி வருகின்றோம், மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்திலிருந்து 255 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, சிறப்பித்தார்.

மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கொடுத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அம்மா வாட்டர் தட்டுப்பாடு ஏற்படுத்துகின்ற, நிலைக்கு காரணம், அந்த உற்பத்தி திறனின் செயல்பாட்டின் கால அளவு முடிந்து விட்டதோடு, அந்த இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டும் வருகின்றது. 3 லட்சம் அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் நிலையில், 1 ¾ லட்சம் அளவிற்கு தான் தண்ணீர் வந்தது. ஆகவே, 3 லட்சம் அளவிற்கு தற்போது தண்ணீர் இயந்திரங்கள் அமைக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த இயந்திரத்தின் கால அவகாசம் முடிந்து விட்டதால் உற்பத்தி குறைந்து விட்டது. மேலும், புதிய இயந்திரம் அமைக்கும் பணியும் தொடங்கி மிக விரைவில் மக்கள் நலனுக்காக வரும் மேலும், இனி பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தம் மட்டுமில்லாமல், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தில் 6 அரசு மருத்துவமனைகளில் முதற்கட்டமாக அம்மா வாட்டர் பாட்டில் இனி ரூ 10 க்கு கிடைக்கும் என்றார். முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பெற்ற தாய் போல அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கொடுத்தவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆனால் அம்மா நம்மிடையே தற்போது இல்லாத நிலையில், நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அம்மா வழியில் ஆட்சி நடத்தி வருகின்றனர்.

இனி என்ன செய்ய வேண்டுமென்கின்ற வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்றார். உடலில் ஊனம் இருந்து பிறப்பவர்கள் தங்களது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை, பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கும், ஏராளமான திட்டங்களை தீட்டி, அவர்கள் ஆரம்பக காலத்தில் பள்ளி படித்தும், கல்லூரி படிக்கும் பருவத்திலும், பணிக்கு செல்லும் காலத்திலும் அனைத்து விதமான திட்டங்களை தீட்டி, இந்தியாவிலேயே முன்னோடு மாநிலமாக்கியதோடு, இன்றுவரை பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகின்றார் என்றார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உள்ளிட்டோர் உடனிந்தனர்.