ஆபரேசனில் வலியை மறக்கச் செய்த தமிழ்ப்பாடல்...வைரலாகும் வீடியோ
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமிக்கு ஆபரேசன் செய்யும்போது, தமிழ் பாடல் ஒலிக்கச் செய்த சம்பவம் ஆச்சயர்த்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பரோக் பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர், அங்குள்ள ஒரு அரசு தாலூகா மருத்துவமனையில் ஆபரேசனுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆபரேசன் செய்யும்போது, அவருக்கு வலி ஏற்படுவடுவதாக மருத்துவரிடம் கூறவே, அப்போது, மருத்துவர், மலரே மெளனமா என்ற பாடலைப் பாடியபடி ஆபரேசன் செய்தார். அவருடன் அந்தச் சிறுமியுடம் கூட பாடினார். நோயாளியின் வலியை மறக்கடிக்கச் செய்த தமிழ் பாடல் என்று மக்களும் இதைப் பரப்பவே. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் அர்ஜூன் –ரஞ்சிதா நடிப்பில், செல்வா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.