வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (16:15 IST)

நடிகை மீனாவின் கணவர் நிராகரிக்கப்பட்டாரா?

meena vishyasakar
புறா எச்சத்தை சுவாசித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசகர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், நடிகை மீனா சினிமா தொழில் அல்லாத ஐடியில் வேலை பார்த்து வந்த வித்யாசாகரை எப்படி திருமணம் செய்தார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு ரியாலிட்டி ஷோவில் மீனா தனது கணவர் வித்யாசாகருடன் கலந்துகொண்டார். அப்போது, அவர் கூறியதாவது: எனது ஜாதகமும், வித்யாசாகரின் ஜாதகமும் சரியாகப் பொருந்தியிருந்தது. ஆனா, அவர் மீது எனக்கு ஈர்ப்பில்லை. சில நாட்கள் கழித்து அவரைத் தொடர்புகொண்டு எனக்கு விருப்பம் இல்லை என்றேன். அவரும் எனக்குப் பிடித்த வரன் கிடைத்த வாழ்த்துகள் எனக் கூறினார்.

என் உறவினர் நீ நல்ல ஒரு வரனை இழக்கிறார் என்ரார். நன்கு யோசித்து வித்யாசாகரை திருமணம் செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த 13 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் திடீரென்று வித்யாசகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.