Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹாசினியையும், தாயையும் கொலை செய்த கொடூரன் தஷ்வந்த அதிரடி கைது

Last Modified புதன், 6 டிசம்பர் 2017 (22:03 IST)
சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்தும், பெற்ற தாயை பணத்திற்காகவும் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கொடூரன் தஷ்வந்த் மும்பையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதால் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தந்தை வீட்டில் இல்லாத போது தாயார் சரளாவை பணத்திற்காகவும் நகைக்காகவும் கடந்த 2ஆம் தேதி கொலை செய்துவிட்டு தலைமைறைவானார்.


தஷ்வந்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் அவர் மும்பையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இதனையடுத்து மும்பை சென்ற தனிப்படை தஷ்வந்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த நிலையில் நாளை முதல் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை தொடங்கும் என்று அம்பத்தூர் சரகத் துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :