புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (19:27 IST)

தகாத உறவால் வந்த வினை...கணவன் செய்த விபரீதம் காரியம்

சென்னை வியாசர் பாடியில் உள்ள சாமியார் தோட்டம் பகுதியில் வசித்துவருபவர் சாந்தா(38). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோர் டிரைவராக உள்ளார்.

இந்நிலையில், சாந்தாவுக்கும் 25 வயதுள்ள ஒரு இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக உருவாகியுள்ளது.

இதனால் சாந்தாவின் வீட்டிற்கு உதயகுமார் அடிக்கடி வந்துள்ளார். அப்போது இரிவரும் தகாத உறவு வைத்திருந்ததாகத் தெரிகிறது. இதையறிந்த அப்பெண்ணின் கணவன் அவரைக் கண்டித்துள்ளார்.

ஆனால் மனைவிக்கும் இளைஞருக்குமான தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், ஆத்திரமடைந்ததால், சாந்தாவின் கணவர் அவரை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அறிந்த போலீஸார் சாந்தாவின் கணவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.