1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (13:11 IST)

வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை.! மருத்துவமனையில் தாயும் சேயும் நலம்..!

Born Child
ஸ்ரீவைகுண்டத்தில்  ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.


 
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கனமழை காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் பணி நடைபெற்றது. 

சூலூரில் இருந்து வந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரின் உதவியுடன் கர்ப்பிணி பெண், 3 குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர்  பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் அனுசுயா மயில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.