ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (20:45 IST)

கலெக்டர் அலுவலத்திற்கு வருவோரிடம் போலீஸார் பலத்த சோதனை

karur
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வாகனங்கள் மற்றும் மக்களின் பைகளையும் சோதனையிட்டு அனுப்பும் போலீஸ், குடிநீரையும், அது குடிநீர் தானா ? பெட்ரோலா ? மண்ணெண்ணையா ? என்று முகர்ந்து பார்த்தும் குடித்து பார்க்கும் செயலால் பகீர் ? 
 
ஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமை அன்று திங்கள் தின கோரிக்கைகள் என்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தினை சார்ந்த மூன்று பேர் தீக்குளித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பினையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக அளவில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினரும், காவலர்களும் பெருமளவில் குவிக்கப்பட்டு சோதனையிட்டும் பின்னர் மக்களை மனுக்கள் தர அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்களின் கண்ணிலேயே மண்ணை துவிவிடும் செயல் போல், எங்கேயோ, ஒழித்து வைத்து எடுத்து சென்ற மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் மக்களை பெரிதளவில் சோதனை செய்த போலீஸார் மற்றும் ஊர்காவல்படையினர் மிகுந்த சோதனைக்கு பின்னரே மக்களை அனுப்புகின்றனர்.

மேலும், பொதுமக்கள் தாங்கள் குடிப்பதற்காக வைத்திருக்கும் குடிநீரையும் திறந்து பார்த்து அது குடிநீர் தானா ? அல்லது ஒயிட் பெட்ரோலா ? என்று போலீஸார் முகர்ந்து பார்த்தும், குடித்து பார்த்தும் பின்னர் பரிசோதனைக்கு பின்னரே மக்களை மனுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு அனுப்புகின்றனர். விபரம் தெரியாதவர்கள் வருபவர்கள் வெடிகுண்டு சோதனை தான் செய்கின்றனரா ? இந்தளவுக்கு சோதனை என்று புலம்பிய படியே செல்லும் பட்சத்தில் அமைந்துள்ளது காவல்துறையினரின் சோதனை என்கின்றனர் நடுநிலையாளர்கள்