திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (10:53 IST)

மேலும் 9 கட்சிகள்.. டெல்லியில் I.N.D.I.A கூட்டணியின் தலைமையகம்! மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!

I.N.D.I.A கூட்டணியில் ஏற்கனவே 26 கட்சிகள் இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு கட்சிகள் இணைந்துள்ளதாக தெரிகிறது. அது மட்டும் இன்றி இன்னும் ஒன்பது கட்சிகள் இந்த கூட்டணியில்  இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் மும்பையில் கூடிய I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் சில எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
I.N.D.I.A கூட்டணியின் தலைமையகத்தை டெல்லியில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் I.N.D.I.A கூட்டணியின் செயல்பாடுகளை சமூக வலைதளத்தில் தீவிர படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் I.N.D.I.A கூட்டணியில் உள்ள 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் இணைந்து  செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் பாஜக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran