வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 7 ஜனவரி 2019 (14:49 IST)

பனை மரத்தில் தலைகீழாக தொங்கிய நபர் ! அதிரவைக்கும் சம்பவம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கணேஷ் (50 ) என்பவர் தினமும் பனை மரம் ஏறும் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
அன்றாடம் பனைமரம் ஏறினால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்பதால் நேற்று, கணேஷ் அருகில் உள்ள தோப்பில் பனைமரத்தில் இருந்து பதனீர் எடுக்க மரத்தில் ஏறினார்.
 
வழக்கம் போல மரம் ஏறியவர் திடீரென்று உச்சியில் தலைகீழாக தொங்கினார்.  அதைப் பார்த்த மக்கள் பதறியடித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
 
அடுத்த சில நிமிடங்களில் போலீஸாருடன், தீயணைப்புத்துறையினரும் வந்து மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த கணேஷனை கீழே இறக்க பல முயற்சிகள் எடுத்தனர்.அதில் தீயணைப்புத்துறையில் ஒருவர் மேலே ஏறி முயன்றார். ஆனால் உச்சியில் எடை தாங்காது என்பதால் அம்முயற்சியும் கைவிடப்பட்டது.
 
தீயணைப்புத்துறையினரிடம் உயரமான ஏணி இல்லாததால் அடுத்து கணேஷ்  கீழே விழாமல் இருக்க வலையை பரவலாக விரித்தனர்.
 
பின்னர் ஜேசிபி கொண்டு வரச் செய்து மரத்தில் மோதச் செய்து கணேஷை வலையில் விழச் செய்தனர். பின் அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
 
அங்கு, கணேசன் ஏற்கனவே மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். கணேசன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுபற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.