சிலந்திக்கு பயந்து போலீஸை அழைத்த நபர்...என்ன கொடுமை இது...

spider
Last Modified வெள்ளி, 4 ஜனவரி 2019 (12:54 IST)
ஆஸ்திரேலியாவில்   வசிக்கும் ஒரு நபர் வழக்கம் போல கழிவறைக்குச் சென்றவர் அங்கிருந்த சிலந்தியைப் பார்த்து பதறியடித்து கத்திக் கூச்சல் போட்டுள்ளார். 
நியூஇயர் தினத்தன்று ஆஸ்திரேலியா போலிஸாருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய வாலிபர் பெர்த்  என்ற இடத்தில் ஒரு வீட்டின் முகவரியைக் கூறி ’அதனுள்  உயிருக்கு பயந்து யாரோ காட்டுத்தனமாக கத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
 
இந்நிலையில் போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். தொலைபேசியில்  தகவல் தெரிவித்த நபர் சொன்னது போலவே அந்த வீட்டில் ஒரு இளைஞர் சிலந்திக்கு பயந்து கத்தி கூச்சல் இட்டுக்கொண்டிருந்தார்.
 
அப்போது அந்த நபர் பாத்ரூம்பில் சிலந்தியைப் பார்த்து மிரண்டு தான் கத்தியதாக போலீஸார் முடிவு செய்தனர். கடைசியில் போலீஸாரே அந்த சிலந்தியைக் கொன்றதாக தகவல் வெளியாகின்றன.
 
ஒரு சிலந்திக்காக கத்தி கூச்சல் போட்ட நபரால் பெர்த் நகரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :