திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (08:18 IST)

மேல்முறையீடு செய்யப்போகிறதா ஈபிஎஸ் தரப்பு: ஜெயகுமார் பதில்

jayakumar
அதிமுக பொதுக்குழு இன்று கூட இருக்கும் நிலையில் இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை உள்பட தனித் தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது என நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். 
 
ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாகவும், ஈபிஎஸ் தரப்பிற்கு பாதகமாகவும் உள்ள இந்த தீர்ப்பு குறித்து அதிமுக தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ’உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம் ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்வது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றும் அதிமுகவுக்கு எப்போதுமே பின்னடைவு என்பது கிடையாது என்றும் தெரிவித்தார் 
 
மேலும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார்