1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 23 ஜூன் 2022 (08:07 IST)

நல்ல பொழுதாக விடிந்துள்ளது. தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கருத்து

pugazhendhi
அதிமுக பொதுக்குழு குறித்து ஓபிஎஸ் தரப்பினர் பதிவு செய்த வழக்கில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து இன்றைய பொழுது நல்ல பொழுதாக விடிந்து இருக்கிறது என்றும் காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிறவர்களுக்கு விடியும் போது கிடைத்த அடிதான் இந்த தீர்ப்பு என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
 
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என எங்கள் அண்ணன் ஓபிஎஸ் கூறியது போலவே தற்போது தீர்ப்பு வந்திருப்பது என்று கூறியுள்ளார்.
 
அதிமுகவில் எப்போதும் ஒற்றை தலைமையைக் கொண்டு வர முடியாது ஆனால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஓபிஎஸ் ஆதரவு இல்லாமல் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.