வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:54 IST)

காதலிக்க மறுத்த சிறுமியின் கழுத்தை அறுத்தவர் கைது!

ஆற்காடு அருகே காதலிக்க மறுத்த சிறுமியின் கழுத்தை அறுத்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கவலை சென்னசமுத்திரம் மோட்டூர் என்ற பகுதியில் வசித்து வருபவ்ர் ராஜவேல் முருகன். இவர்  அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி(16)  காதலித்து வந்துள்ளார்.

சமீபத்தில் அந்தச் சிறுமிடன் சென்று தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தச் சிறுமி மறுக்கவே, ஆத்திரம் அடைந்த நபர் அந்தச் சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார்.

அருகில் இருந்தோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதையடுத்து, போலீசார் ராஜவேல்குமாரை தேடி வந்த நிலையில், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.