1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2022 (08:06 IST)

தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளின் தரம்: இணையதளத்தில் வெளியீடு!

engineering
தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளின் தரம் குறித்த முழு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்ஜினியரிங் கல்லூரிகளின் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் வசதிக்காக எந்தெந்த கல்லூரிகள் சிறந்த கல்லூரிகள்? எநெத கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் அதிகம்? செமஸ்டர் தேர்வில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் போன்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
 
கடந்த ஆண்டு எந்த கல்லூரியில் கட் ஆப் மதிப்பெண் அதிகம் என்பது போன்ற விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கடந்த ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள், கல்லூரியின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு போன்ற விபரங்களும் இதில் உள்ளன. இந்த விவரங்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கு கலந்தாய்வு செய்யும் மாணவ மாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.