வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (11:18 IST)

நடுரோட்டில் பற்றி எரிந்த அரசு பேருந்து.. நல்வாய்ப்பாக தப்பிய பயணிகள்! - கோவையில் பரபரப்பு!

Coimbatore bus fire.jpg

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு காலையில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்துள்ளது. பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வந்துக் கொண்டிருந்தபோது பேருந்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

 

இதனால் உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், பயணிகளை வெளியேறுமாறு எச்சரித்துள்ளார். பயணிகள் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில், சில நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்தது. பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.
 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K