1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (19:46 IST)

காவல் ஆய்வாளரை பலர் முன்னிலையில் திட்டிய கலெக்டர் : பரபரப்பு சம்பவம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அத்திவரதர் கோவிலில், உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்த காவல் ஆய்வாளவரை மாவட்ட ஆட்சியாளர் எல்லோர் முன்னிலையிலும் கடிந்து கொண்டந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இன்று அத்திவரதர் வைபவத்தில் முக்கிய பிரமுகர்கள் வரும் வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் காவல் ஆய்வாளர் எல்லோரையும் அனுமதித்தார். இதனைப் பார்த்த மாவட்ட கலெக்டர் பொன்னையா எல்லோரும் கூடியிருக்கும் போது அவரை கடிந்து கொண்டார்.+
 
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளும் போது,  பலரிடம் விஐபி பாஸ் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனால் இதற்கு அனுமதி அளித்த ஆய்வாளர் மீது வாய்மொழியாக புகார் அளித்து அவரை பணியிடை நீக்கம் செய்யவேண்டுமென்று ஆட்சியர் முறையிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.