1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (15:31 IST)

அம்மாவோட கள்ளக்காதலன் தான் என் புருஷன்: ரூமில் மாட்டிய டீச்சர் பகீர்!!

கள்ளக்காதலனுடன் இருந்த அம்மாவை ரூமில் பூட்டி வைத்து உறவினர்களுக்கு காட்டி கொடுத்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
 
பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நெல்லையில் ஒரு அரசு பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார்.  
 
இந்நிலையில் இந்த டீச்சருக்கு வேறு ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது அந்த டீச்சரின் மகளுக்கும் தெரியவந்துள்ளது. இப்படி இருக்கையில் சம்பவ நாளான்று அந்த டீச்சர் அந்த இளைஞருடன் மகள் கண் முன்னே வீட்டின் ரூமிற்குள் சென்றுள்ளனர்.  
இதை பார்த்து கடுப்பான மகள் ரூம் கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு உறவினர்களுக்கு போன் போட்டு அனைவரையும் வரவைத்துள்ளார். பின்னர் வந்து சேர்ந்த உறவினர்கள் அனைவரும் டீச்சரையும், அந்த இளைஞரையும் பிடித்து சரமாரியாக வெளுத்து வாங்கியதுடன், போலீசிலும் ஒப்படைத்தனர். 
 
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த டீச்சர் சொன்ன சில விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த டீச்சர் கூறியதாவது, என் புருஷனுக்கு 68 வயசாகுது. முதல்ல என் அம்மாவுக்கும் என் புருஷனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துச்சு. அவங்களோட உறவி நீடிக்கணும்னு என்னை, எங்க அம்மா அவருடைய கள்ளக்காதலனுக்கு கட்டிவச்சாங்க. 
இதனால் எனக்கு அவர் கூட வாழவே எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் இந்த இளைஞரோட 10 வருஷமா தொடர்பு வச்சியிருக்கேன் என தெரிவித்துள்ளார். டீச்சரின் இந்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரை நெல்லையில் உள்ள ஒரு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.