1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (22:08 IST)

காதலியை கொன்று 3 நாட்கள் பிணத்துடன் இருந்த காதலன்!

திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் காதலியைக் கொன்று பிணத்துட ன் இருந்த காதலனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 3 ஆம் தேதி இரவு மேற்கு வங்க மா நிலத்தைச் சேர்ந்த இளம் ஜோடியினர் அறை எடுத்துத் தங்கினர்.

ஆனால், கடந்த 2 நாட்களாக  அந்த அறையின் கதவு திறக்கப்படாத நிலையில், ஊழியர்கள் சென்ரு அக்கதவைத் தட்டினர். பின், விடுதியில் துர் நாற்றம் வீசவே, அவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த  நிலையில், திருவல்லிக்கேணி போலிஸார் அங்கு சென்று அறையினுள்ளே தழிடப்பட்டதால் அதை உதைத்து உள்ளே சென்றனர்.  உள்ளே இருவரும் பிணமாகக் கிடந்தனர். அதில், காதலன் காதலியின் முகத்தில் தலையணை அழுத்திக் கொன்றது தெரியவந்தது.

மேலும்,  காதலனின் பெயர் பிரசெஞ்சித் கோஷ் என்றும் அவர் தன் காதலியைக் கொன்று இரண்டு நாட்களுக்குப் பின் அவரும் தற்கொலை செய்துகொண்டதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.