ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (12:18 IST)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் கண்டெடுப்பு!

அனைத்து கோயில்களும் உண்டியலில் கிடைக்கப்பெற்று பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகளின் அளவு குறித்து ஆய்வு நடத்தி வரும் நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
2016ல் தங்க நகைகளின் விவரம் குறித்து ஆய்வு செய்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் திருக்கோயில்களில் பயன்படாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டத்தில் வருவாய் ஈட்ட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.