வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (09:16 IST)

ஆசிரியர்களை கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது: கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!

ஆசிரியர்களை கல்லூரிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஆன்லைன் வகுப்பை ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து நடத்த வேண்டும் என ஒரு சில தனியார் பள்ளி கல்லூரி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது 
 
இது குறித்து தகவல் தெரிந்த கல்வி இயக்ககம் அதிரடியாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களை கல்லூரிக்கு வந்து ஆன்லைன் பாடங்களை நடத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்றும் வீட்டிலிருந்தே கூட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்றும் அறிவித்துள்ளது
 
கல்லூரிக்கு வர ஆசிரியர்களை நிர்பந்தம் செய்தால் கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக ஆசிரியர்கள் கல்லூரிக்கு வரும் போது நோய் பரவும் ஆபத்து இருப்பதால் அவர்களுடைய பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது