திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (20:55 IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மகேஷ்வரன். இவர்,  அங்குள்ள பள்ளியில் 9 மற்றும் 10 வகுப்பிற்கு தமிழ் ஆசிரியாக வகுப்பு எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மாணவிகளை தனித்தனியாக அழைத்து ஆபாச படங்கள் காண்பித்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தமிழ் ஆசிரியர் மகேஷ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.