புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 நவம்பர் 2021 (15:45 IST)

கனமழையில் மூழ்கிய 500 ஏக்கர் பயிர்கள்: விவசாயிகள் வேதனை!

கனமழை காரணமாக 500 ஏக்கர் சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை என்ற பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில மாதங்களாக கஷ்டப்பட்டு பயிர் செய்து அறுவடை செய்யும் நேரத்தில் திடீரென கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர்கள் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
 
பயிர்களை வெள்ளத்தில் மூழ்கியதால் ஏற்படும் இழப்பிற்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது