வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 மே 2020 (12:44 IST)

சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளு குளு மழை: இன்னும் 48 மணி நேரத்தில்...

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
 
அம்பன் புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மதிய வேளைகளில் வெளியே வருவதை தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
ஆம், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு. குறிப்பாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தி.மலை, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.