செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 மே 2020 (11:14 IST)

கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு தனி வழி! – ஆட்சியர்களுக்கு புதிய உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தனிவழி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகமெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது. நான்காவது கட்டமாக தொடர்ந்துள்ள ஊரடங்கு மே இறுதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால், அதற்கேற்ப தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கொரோனா தொற்று மிக தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு தனி பாதை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளரிடமிருந்து உத்தரவு வெளியாகியுள்ளது. தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினிகள் உள்ளிட்டவை தெளிக்கப்பட்டு வந்தாலும் கூட நோய் தொற்று அல்லாதவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் நோய் பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.