திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (09:18 IST)

15 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 15 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit By Prasanth.K