திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (19:47 IST)

மதுபோதையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்...

pudhukottai
புதுக்கோட்டை மாவட்டம்  பேருந்து நிலையத்தில்  கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் புதிய  பேருந்து நிலையத்தில் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இருபிரிவினர் மோதிக் கொண்டனர்.

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களிடையே இந்த மோதம் மதுபோதையில் ஏற்பட்டதாகவும்,  தற்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு மாணவரிடம் போலீஸ் விசாரித்து வருவதால், விரைவில் மற்ற மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகிறது.

 
Edited by Sinoj