ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (11:59 IST)

சிறந்த நிர்வாகம், ஊராட்சி, மின் ஆளுமை! – விருதுகளை குவித்த தமிழகம்!

இந்தியாவில் சிறந்த ஊராட்சி நிர்வாகம், மின் ஆளுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் தமிழக அரசு மற்றும் தமிழக மாவட்டங்கள் விருதுகளை பெற்றுள்ளன.

2018-2019ம் ஆண்டிற்கான மத்திய அரசின் சிறந்த நிர்வாகத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் சிறந்த மின் ஆளுமைக்கான மத்திய அரசின் விருதை தமிழக அரசு பெற்றுள்ளது. ஊராட்சி நிர்வாகங்களில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தீனதயாள் உபாத்யாய ஊராட்சி மேம்பாட்டு விருதுகளில் சிறந்த வட்டார ஊராட்சியாக சேலம் கொங்கணாபுரம் மற்றும் மதுரை திருமங்கலம் ஒன்றியங்களும், சிறந்த கிராம ஊராட்சியாக ஆண்டாங்கோவில் (கரூர்), குருமத்தூர் (ஈரோடு), அம்புகோவில் (புதுக்கோட்டை), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), இக்கரை பொழுவாம்பட்டி (கோவை), மேவளூர்குப்பம் (காஞ்சிபுரம்) ஆகியவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிட மேலும் பல பிரிவுகளில் பல கிராம சபைகள், ஊராட்சிகள், நகராட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.