செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (14:08 IST)

தை பொங்கலுக்கு கிராமங்கள்தோறும் விளையாட்டு போட்டிகள்! – அமைச்சர் ஆலோசனை!

ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில் அதையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்த அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தை முதல் நாள் தமிழர்களின் மரபான பண்டிகையான பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அதற்கடுத்த அடுத்த நாட்களில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கலும் கொண்டாடப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் பல ஊர்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்துவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தைப்பொங்கலுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து இன்று விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு கிராமங்கள்தோறும் ஊரக விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே அரசின் பொங்கல் பையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அமைச்சரும் தமிழ் புத்தாண்டு என்றே கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.