ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (08:52 IST)

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பகலில் வெயில், மாலையில் மழை: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று பகலில் வெயில் கொளுத்தும் என்றும் ஆனால் மாலை வேளையில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் வெப்பம் குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் குளிர்ச்சியான தட்பவெட்பம் நிலவி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்  இன்று தனது சமூக வலைதளத்தில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும் என்றும், ஆனால் அதே நேரத்தில்  மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva