வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 ஜூன் 2023 (07:35 IST)

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

Rain
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக கொளுத்திக் கொண்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக சென்னையின் பல இடங்களில் நேற்று மழை பெய்ததால் இரவில் குளிர்ச்சியான தட்பவெட்பம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த  3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன்படி தமிழகத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva