பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே? தமிழக எம்.பி.க்கள் போராட்டம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி எங்கே என கேள்வி எழுப்பி தமிழக எம்பிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் வெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான நிதிகளை இன்னும் ஒதுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை.
இதனை அடுத்து தமிழக எம்பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Edited by Mahendran