ஜனவரி 30,31ம் தேதிகளில் வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்! – பணியாளர்கள் சம்மௌனம் உறுதி!
வங்கி சங்கங்களின் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்த போராட்டம் அறிவித்திருந்தது.
இதனிடையே மும்பையில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பிடம் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் திட்டமிட்டப்படி ஜனவரி 30,31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அகில இந்திய பணியாளர்கள் சம்மௌன பொதுசெயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
Edit By Prasanth.K