திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (17:10 IST)

சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நம்பர் 1: அமைச்சர் உதயநிதி

சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நம்பர் 1 என இன்று போல் என்றும் வெற்றி நடைபோட்டிட அயராது உழைத்திடுவோம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையில் இந்திய ஒன்றியத்தின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மகப்பேறியல் துறையில் தமிழ்நாடு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
 
மகப்பேறியல் சார்ந்து ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின்படி, நம்முடைய  சேப்பாக்கம் தொகுதியில் அமைந்துள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவ அறைகள் உள்ளிட்ட கட்டுமான வசதிகளை இன்று திறந்து வைத்தோம். 
 
மகப்பேறு மருத்துவ சேவைகளுக்கான PICME 3.0 மென்பொருள் - அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு கால இறப்புகளை தடுக்க உதவிடும் உபகரணங்கள் - அவசர கால மகப்பேறு & குழந்தைகள் பராமரிப்பு மையத்துக்கு தேவையான கருவிகளின் சேவைகளையும் தொடங்கி வைத்தோம். மகப்பேறியல் துறையில்  சிறப்பு பயிற்சி முடித்த செவிலியர்களுக்கு சான்றிதழ்கள் - சேர்க்கை ஆணைகளை வழங்கினோம்.
 
சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நம்பர் 1 என இன்று போல் என்றும் வெற்றி நடைபோட்டிட அயராது உழைத்திடுவோம். 
 
Edited by Mahendran