திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (12:07 IST)

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி திட்டம் தொடக்கம்: கவர்னர் பெருமிதம்

money
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதுச்சேரியில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. 
 
புதுவைகவர்னர் தமிழிசை கலந்து சௌந்தரராஜன் அவர்கள் இதனை தொடங்கி வைத்து ’குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
 
பெண்கள் கையில் பணம் இருந்தால் தான் அது சுயநலத்திற்காக அல்லாமல் குடும்பத்திற்காக பொதுநலத்திற்காக பயன்பெறும் என்பதை உணர்ந்த இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
புதுச்சேரியில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பே இல்லாமல் தொடங்கி உள்ளோம் என்றும் ஆனால் இந்த திட்டத்தை அறிவித்த ஒரு சிலர் இன்னும் தொடங்காமல் இருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார். 
 
புதுச்சேரியில் சுமார் 71 ஆயிரம் குடும்பத்தலைவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெருபவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
 
Edited by Mahendran