வெள்ளி, 19 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (18:52 IST)

சிவபெருமானின் வாயிலிருந்து தமிழ்,சமஸ்கிருதம் மொழிகள் வந்தது- யோகி ஆதித்ய நாத்

சிவபெருமானின் வாயிலிருந்து தமிழ்,சமஸ்கிருதம் மொழிகள் வந்தது- யோகி ஆதித்ய நாத்
தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையேயான பாரம்பரிய தொடர்புகளை சிறப்பிக்கும் வகையில்,  இன்று வாரணாசியில் உள்ள காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி  நவம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி, மத்திய இணைய அமைச்சர் என்.முருகன், பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த  நிலையில்,  இன்று நடைபெற்ற நிகழ்ச்சில் பிரதமர் மோடி, உபி முதல்வர், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய  உத்தபிரதேச முதல்வர்  யோகி ஆதித்ய நாத், தமிழ்மொழி மிகவும் பழமையானது. ஒரு பழங்கதை உள்ளது. அதில், கூறப்படுவதுபோன்று, சிவபெருமானின் வாயிலிருந்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகள் வந்தது என்று  தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj