வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2018 (17:47 IST)

வாலண்டியரா வந்து மட்டிக்கொண்ட எச்.ராஜா: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

நேற்று முந்தினம் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். ஆனால் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். இதுகுறித்து வீடியோ மூலம் கருத்து தெரிவித்த எச்.ராஜாவை நெட்டிசன்கள் தீட்டி வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் நடந்த மேடையில் எச்.ராஜாவும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆனால் ஆண்டாள் விவகாரத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா இந்த விவகாரம் குறித்து பதிலளிக்காமல் இருந்து வந்தார்.
 
இந்நிலையில் தற்போது தனது டுவிட்டரில் எச்.ராஜா இது தொடர்பாக ஒரு வீடியோவும், புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் திமுக தலைவர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்திருக்காமல் அமர்ந்திருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் அவர் எழுந்து நிற்கிறார்.
 
கருணாநிதி எழுந்து நிற்காமல் அமர்ந்திருக்கும் வீடியோவும், அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் வேறு வேறு சம்பவத்தின் போது எடுக்கப்பட்டவை. வயது முதுமையின் காரணமாக எழும்ப முடியாமல் இயலாமையில் இருப்பவரை விஜயேந்திரர் அமர்ந்திருந்ததுடன் எச்.ராஜா ஒப்பிட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
இதனையடுத்து நெட்டிசன்கள் எச்.ராஜாவின் இந்த செயலுக்கு அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். அவர் வெளியிட்ட வீடியோவும், புகைப்படமும் வேறு வேறு நிகழ்வுகளில் எடுக்கப்பட்டதால் எச்.ராஜாவின் இந்த செயல் அதிகமாக நெட்டிசன்களால் விமர்சிக்கப்படுகிறது.